Advertisement

  • வீடு
  • உடல்நலம்
  • ஆரோக்கியமாக இருக்க தினமும் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை

ஆரோக்கியமாக இருக்க தினமும் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை

By: Karunakaran Mon, 14 Sept 2020 3:41:25 PM

ஆரோக்கியமாக இருக்க தினமும் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அல்லது பராமரிக்கும் ஓர் உடல் செயல்பாடே உடற்பயிற்சி. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. நீங்கள், தவறாமல் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம், உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற சில நோய்கள் உருவாகும் அபாயம் குறைக்கிறது. மேலும் உங்களின் உடலை ஆரோக்கியமான எடையில் வைத்திருக்க உதவும்.

உடற்பயிற்சி செய்து வருவது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். ஆனால், விரைவாக உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சிலர் அளவுக்கு அதிகமா உடற்பயிற்சி செய்வது உண்டு. நீங்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்யும் போது உங்கள் செயல்திறன் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது; மேலும் உங்கள் முன்னேற்றத்தையும் குறைக்கும். தினசரி உடற்பயிற்சி செய்வது நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

exercise,healthy,weight,workout ,உடற்பயிற்சி, ஆரோக்கியமான, எடை, பயிற்சி

நீங்கள் அதிகபடியாக உடற்பயிற்சி செய்து வர தேவையில்லை; மற்றும் தினசரி செய்ய வேண்டும் என்றும் எந்த அவசியமும் இல்லை. உடற்பயிற்சிகளுக்கு இடையில் ஓய்வு எடுப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏன்னென்றால், உடற்பயிற்சியின் போது ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து உங்கள் தசைகளை மீட்கவும் மற்றும் உங்கள் தசைகள் மீண்டும் வளரவும் ஓய்வு என்பது மிகவும் அவசியம்.

நல்ல ஆரோக்கியம் மற்றும் உடற்பயிற்சி பராமரிப்பதற்கு, ஓய்வு நாட்கள் எவ்வளவு முக்கியம் என்று பல ஆய்வுகள் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியுள்ளது. நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்து வந்தால் கூட அது போதுமானது. எனவே, அவரவர் உடல் நலத்திற்கு ஏற்றவாறு உடற்பயிற்சி செய்வதே நல்லது.

Tags :
|