Advertisement

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் 10 கட்டளைகள்

By: Monisha Thu, 06 Aug 2020 10:03:26 AM

கொரோனா வைரஸிடம் இருந்து தப்பிக்க உதவும் 10 கட்டளைகள்

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்னும் தொடர்கதையாய் நீண்டு கொண்டே செல்கிறது. நேற்று மதியம் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக கொரோனா தரவு மையத்தின் புள்ளிவிவரத்தின் படி உலகமெங்கும் 1 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரம், இந்த வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்து விட்டதையும் தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான பாதிப்பு நம்மை அதிகமாக வந்து சேராமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்? என மருத்துவ நிபுணர்கள் 10 கட்டளைகளை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

corona virus,protection,exercise,diet,sleep ,கொரோனா வைரஸ்,பாதுகாப்பு,உடற்பயிற்சி,உணவு,தூக்கம்

1. உடற்பயிற்சியை தொடர்ந்து செய்யுங்கள்.

2. சீரான உணவு சாப்பிடுங்கள், போதுமான தூக்கம் தூங்குங்கள்.

3. நண்பர்களுடனும், குடும்பத்தினருடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைப்பிடியுங்கள்.

4. மது குடிக்காதீர்கள். போதைப்பொருட்கள், புகையிலைப்பொருட்கள் பயன்படுத்தாதீர்கள்.

5. கொரோனா பற்றி பேசுவதை குறையுங்கள்.

corona virus,protection,exercise,diet,sleep ,கொரோனா வைரஸ்,பாதுகாப்பு,உடற்பயிற்சி,உணவு,தூக்கம்

6. பதற்றம் தவிருங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.

7. முடிந்தவரை வீட்டில் இருங்கள். காய்ச்சல், மார்பு தொற்று என்றால் தனிமைப்படுத்தி கொண்டு, டாக்டரை தொடர்பு கொள்ளுங்கள்.

8. எப்போதும் முக கவசம் அணியுங்கள். கைச்சுத்தம் மறவாதீர்கள்.

9. உங்கள் கண்களை, மூக்கை, வாயை தொடுவதை தவிருங்கள்.

10. கதவின் கைப்பிடிகள், சுவிட்சுகள், டி.வி. ரிமோட், செல்போன் போன்றவற்றை கிருமிநாசினி கெண்டு சுத்தப்படுத்துங்கள்.

Tags :
|