Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிப்பு

By: Monisha Fri, 13 Nov 2020 08:40:18 AM

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையையொட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டது. அந்தவகையில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத் தொகை என மொத்தம் 10 சதவீதம் போனசாக அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

diwali,bonus,co operative society,employees,offer ,தீபாவளி,போனஸ்,கூட்டுறவு சங்கம்,ஊழியர்கள்,சலுகை

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளியையொட்டி 10 சதவீத போனஸ் அறிவிக்கப்படுகிறது. அதாவது 8.33 சதவீத போனஸ் மற்றும் 1.67 சதவீத கருணைத்தொகை என 10 சதவீத போனஸ் வழங்கப்படும்.

இதுதவிர வேறு எந்தவிதமான நிதி சலுகைகளையும் கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தமிழக அரசிடம் கேட்கப்பட கூடாது" என்று கூறப்பட்டுள்ளது.

Tags :
|
|