Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

By: Monisha Sat, 22 Aug 2020 11:48:45 AM

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணி

விநாயகர் சதுர்த்தி இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கும், விநாயகர் ஊர்வலத்திற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மக்கள் வீடுகளில் இருந்தே விநாயகரை வழிபட்டு, விநாயகர் சதுர்த்தியை கொண்டாடும்படி தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி விழா களையிழந்துள்ளது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் சுமார் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், புதுப்பேட்டை, புளியந்தோப்பு, ஓட்டேரி உள்பட 70 இடங்கள் பிரச்சினைக்குரிய பகுதிகளாக போலீசார் கண்டறிந்துள்ளனர். அங்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ganesha chaturthi,chennai,police,security mission ,விநாயகர் சதுர்த்தி,சென்னை,போலீசார்,பாதுகாப்பு பணி

விநாயகர் சிலையை கரைக்கும் இடங்களான எண்ணூர், திருவொற்றியூர், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், பட்டினப்பாக்கம் ஆகிய இடங்களில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நபர் தவிர அமைப்பு ரீதியாகவோ, அதிக கூட்டம் சேர்த்து சிலைகளை கரைக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க சென்னை முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Tags :
|