Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்- 10 பேர் கைது

திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்- 10 பேர் கைது

By: Monisha Sat, 05 Dec 2020 2:24:39 PM

திருச்சி விமான நிலையத்தில் 8.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்- 10 பேர் கைது

திருச்சி விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், அபுதாபி, மஸ்கட் போன்ற வெளிநாடுகளுக்கும், சென்னை, பெங்களூரு போன்ற உள்நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் இயக்கப்படவில்லை. மத்திய அரசின் சிறப்பு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த சிறப்பு விமானங்களில் வெளிநாடுகளில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் நேற்று காலை 6.00 மணியளவில் துபாயிலிருந்து இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் சிறப்பு மீட்பு விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. இதேபோன்று துபாயிலிருந்து மற்றொரு சிறப்பு விமானம் நேற்று காலை 5.15 மணி அளவில் திருச்சி வந்தடைந்தது.

airport,special flight,gold,smuggling,seizure ,விமானநிலையம்,சிறப்புவிமானம்,தங்கம்,கடத்தல்,பறிமுதல்

இந்த விமானங்களில் அதிகளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அந்த விமானங்களில் வந்தவர்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சையதுஅபுதாகிர் மற்றும் சென்னையை சேர்ந்த ஜோகிந்தர் சிங், கோழிக்கோட்டையை சேர்ந்த நெடும்பிரசாத், இளையான்குடியை சேர்ந்த கஞ்சன் அஜ்மல்கான், சென்னையை சேர்ந்த மைதீன் அகமது மற்றும் கஞ்சன் சையது இப்ராகிம் ஆகிய ஆறு பேர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வலுத்தது. பின்னர் அவர்களை அதிகாரிகள் தனியாக அழைத்துச்சென்று சோதனையிட்டனர்.

அப்போது அவர்கள் தங்களது உடலில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் ஆறு பேரிடம் இருந்தும் மொத்தம் 8.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் ஆறு பேர் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய ஒரு பெண் உள்பட நான்கு பேர் என மொத்தம் பத்து பேரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.4¼ கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Tags :
|