Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு - மந்திரி இரானி

கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு - மந்திரி இரானி

By: Karunakaran Tue, 22 Sept 2020 7:30:31 PM

கொரோனா காலத்தில் கற்பழிப்பு தொடர்புடைய 13,244 புகார்கள் பதிவு - மந்திரி இரானி

இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் கொரோனா பாதிப்புகளால் பொதுமக்கள் பெரிதும் முடங்கி போயுள்ளனர். தற்போது, ஊரடங்கு மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பும் இயல்பு வாழ்க்கைக்கு பெருமளவில் மக்கள் திரும்பவில்லை. கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த 14ந்தேதி தொடங்கி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வருகிறது.

இந்த மழைக்கால கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பாராளுமன்ற மேலவையில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை மந்திரி ஸ்மிரிதி இரானி இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து செப்டம்பர் 15ந்தேதி வரை இந்திய குழந்தைகள் தொண்டு அமைப்புக்கு குழந்தைகள் பாலியல் வழக்குகள் தொடர்புடைய 3,941 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

complaints,rape,corona period,minister irani ,புகார்கள், கற்பழிப்பு, கொரோனா காலம், அமைச்சர் இரானி

மேலும் அவர், கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து ஆகஸ்டு 31ந்தேதி வரையில் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்திற்கு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல் தொடர்புடைய 420 வழக்குகளின் விவரங்கள் வந்துள்ளதாக கூறினார்.

தேசிய சைபர்கிரைம் அறிவிப்பு வலைதளத்திற்கு கடந்த மார்ச் 1ந்தேதியில் இருந்து செப்டம்பர் 18ந்தேதி வரையில் கற்பழிப்பு மற்றும் கும்பல் கற்பழிப்பு தொடர்புடைய மொத்தம் 13 ஆயிரத்து 244 புகார்கள் வந்துள்ளன என தேசிய குற்ற பதிவு துறை தெரிவித்துள்ளதாக இரானி தெரிவித்து உள்ளார்.

Tags :
|