Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா நிவாரண நிதியாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு

கொரோனா நிவாரண நிதியாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு

By: Nagaraj Tue, 12 May 2020 10:38:36 AM

கொரோனா நிவாரண நிதியாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி ஒதுக்கீடு

கொரோனா நிவாரண நிதியாக 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை மத்திய நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது.

கொரோனா தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு ரூ. 6,195 கோடியை, நிதி அமைச்சகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக, கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

corona,relief,federal ministry of finance,twitter post ,கொரோனா, நிவாரணத் தொகை, மத்திய நிதி அமைச்சகம், டுவிட்டர் பதிவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு நிதி அமைச்சகம், ரூ. 6,195 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்புக்கு ரூ.638 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ.417.75 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 335.41 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக மேகாலயாவிற்கு ரூ.40 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
---------------
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'கொரோனா நெருக்கடியில் இருக்கும் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், 15வது நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி, 2வது தவணையாக, 14 மாநிலங்களுக்கு ரூ .6,195.08 கோடி வழங்கப்பட்டுள்ளது' என பதிவிட்டுள்ளார்.

corona,relief,federal ministry of finance,twitter post ,கொரோனா, நிவாரணத் தொகை, மத்திய நிதி அமைச்சகம், டுவிட்டர் பதிவு

பிரதமர் மோடியுடனான நேற்றைய ஆலோசனையின் போது, முதல்வர் பழனிசாமி தமிழகத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணத் தொகை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|