Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் 17,469 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு விபரம்

சென்னையில் 17,469 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு விபரம்

By: Monisha Mon, 13 July 2020 4:20:14 PM

சென்னையில் 17,469 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை; மண்டல வாரியாக முழு விபரம்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் நேற்று புதிதாக 4 ஆயிரத்து 244 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 38 ஆயிரத்து 470 ஆக அதிகரித்துள்ளது.

நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 89 ஆயிரத்து 532 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 77,338 ஆக உள்ளது. 17,469 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chennai,coronavirus,influence,kills,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 2,497
அண்ணா நகர் - 1,849
தேனாம்பேட்டை - 1,651
தண்டையார்பேட்டை -1,331
ராயபுரம் - 1,290
அடையாறு - 1,323
திரு.வி.க. நகர் - 1,069
வளசரவாக்கம் - 979
அம்பத்தூர் - 977
திருவொற்றியூர் - 707
மாதவரம் - 540
ஆலந்தூர் - 595
பெருங்குடி - 381
சோழிங்கநல்லூர் - 475
மணலி - 294

Tags :
|