Advertisement

தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

By: Nagaraj Wed, 19 Aug 2020 09:16:08 AM

தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

பணியிட மாற்றம்... தமிழகம் முழுவதும் 18 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையராக உள்ள லட்சுமணன், சென்னை ராயப்பேட்டை உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடபழனி காவல் உதவிஆணையர் ஆரோக்கிய பிரகாசம், பல்லாவரம் உதவி ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

dsps,transfer,order,coimbatore,nilgiris ,டிஎஸ்பிக்கள், இடமாற்றம், உத்தரவு, கோவை, நீலகிரி

இதேபோல் பல்லாவரம் உதவி ஆணையர் தேவராஜ், தேனாம்பேட்டைக்கும், எழும்பூர் உதவிஆணையர் அசோகன், திருவள்ளூர் மாவட்ட சமூகநீதி, மனிதஉரிமைகள் பிரிவுக்கும் சென்னை போக்குவரத்து உதவி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி அமலாக்கப்பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உட்பட கோவை, நீலகிரி, மதுரை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாமக்கல், ஈரோடு, தேனி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 18 டிஎஸ்பிக்களை இடமாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Tags :
|
|