Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தீபாவளிக்குள் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி; மத்திய அமைச்சர் தகவல்

தீபாவளிக்குள் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி; மத்திய அமைச்சர் தகவல்

By: Nagaraj Sun, 01 Nov 2020 4:48:01 PM

தீபாவளிக்குள் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி; மத்திய அமைச்சர் தகவல்

25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி... தனியார் வர்த்தகர்கள் 7 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளனர். தீபாவளிக்குள் மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாக உள்ளதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.

இந்தியாவில் சில வாரங்களாக வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க வெங்காய ஏற்றுமதிக்கு தடை, வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மேலும் தனியார் வர்த்தகர்களும் வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது:

union minister,price,onion,deepavali,import ,மத்திய அமைசசர், விலை, வெங்காயம், தீபாவளி, இறக்குமதி

தனியார் வர்த்தகர்கள் 7 ஆயிரம் டன்கள் வெங்காயம் இறக்குமதி செய்துள்ளனர். தீபாவளி முன்பு மேலும் 25 ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதியாக உள்ளதால் உள்நாட் சப்ளை நிலவரத்தில் முன்னேற்றமும், விலையும் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டுறவு நாபாட்டும் இறக்குமதியை தொடங்கும் என்பதால் சந்தையில் போதுமான சப்ளை இருக்கும்.

வெங்காயம் தவிர 10 லட்சம் டன் உருளைகிழங்கும் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக 2021 ஜனவரி வரை உருளை கிழங்கு இறக்குமதி மீதான சுங்க வரி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில நாட்களில் பூடானிலிருந்து சுமார் 30 ஆயிரம் டன் உருளை கிழங்கு வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இறக்குமதி வெங்காயம் மற்றும் உருளைகிழங்கால் உள்நாட்டில் சப்ளை அதிகரிப்பதோடு, விலையும் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|
|