Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது; 2176 கிராம் தங்கம் பறிமுதல்

வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது; 2176 கிராம் தங்கம் பறிமுதல்

By: Monisha Sat, 12 Dec 2020 1:13:57 PM

வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வந்த 3 பேர் கைது; 2176 கிராம் தங்கம் பறிமுதல்

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்தது. இதில் வந்த பயணிகளிடம் திருச்சி விமான நிலைய மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கடலூரை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 152 கிராம் எடை கொண்ட ரூ.7.65 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதேப்போல் துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளிடம் சோதனை செய்ததில் நாகை மாவட்டம் பழையாறையை சேர்ந்த முகமது சாதிக் என்பவர் தனது பேண்ட் பாக்கெட்டில் 1128 கிராம் எடையுள்ள ரூ56.61 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

abroad,gold,smuggling,arrest,seizure ,வெளிநாடு,தங்கம்,கடத்தல்,கைது,பறிமுதல்

மேலும் அதே விமானத்தில் வந்த தஞ்சையை சேர்ந்த முகமது ஜியாவுதீன் சாகிப் தனது உடலில் மறைத்து எடுத்து வந்த 896 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்புரூ.44.97 லட்சம்.

தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் சுரேஷ், முகமது சாதிக் மற்றும் முகமது ஜியாவுதீன் சாகிப் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தின் மொத்த எடை 2176 கிராம் ஆகும். மேலும் அதன் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 9 லட்சத்து 22 ஆயிரம் ஆகும்.

Tags :
|
|
|