Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவிக்க முடியாது - மம்தா பானர்ஜி

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவிக்க முடியாது - மம்தா பானர்ஜி

By: Karunakaran Sun, 13 Dec 2020 6:23:11 PM

3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை விடுவிக்க முடியாது - மம்தா பானர்ஜி

மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு இன்னும் 6 மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அரசை வீழ்த்தி, ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா தீவிரமாக உள்ளது. இதனால் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல்-பா.ஜனதா தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் அணிவகுப்பு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சட்டம்-ஒழுங்கு குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. நட்டாவின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

3 ips officers,mamata banerjee,central government,bjp ,3 ஐ.பி.எஸ் அதிகாரிகள், மம்தா பானர்ஜி, மத்திய அரசு, பாஜக

மேற்கு வங்காள போலீஸ் ஐ.ஜி.ராஜீவ்மிஸ்ரா, டி.ஐ.ஜி. பிரவீன்குமார் திரிபாதி, டைமன்ட் ஹார்பர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலோநாத் பாண்டே ஆகியோரை மத்திய அரசு பணிக்கு மாற்றி உத்தர விட்டது. இதை மம்தா அரசு ஏற்க மறுத்துவிட்டது. 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளையும் விடுவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கல்யாண் பானர்ஜி கூறுகையில், 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய பணிக்கு மாற்ற உத்தரவிட்டதன் மூலம் மேற்கு வங்காளத்தில் மறைமுகமாக அவசர நிலையை கொண்டு வர முயற்சி நடக்கிறது. மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பயங்கரவாதிகள் போல் நடத்துகிறார்கள். 3 அதிகாரிகளையும் மத்திய அரசு பணிக்கு விடுவிக்க முடியாது என்று கூறினார்.

Tags :