Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெய்ரூட்டில் ஏற்பட்ட விபத்தால் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்

பெய்ரூட்டில் ஏற்பட்ட விபத்தால் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்

By: Karunakaran Thu, 06 Aug 2020 11:15:36 AM

பெய்ரூட்டில் ஏற்பட்ட விபத்தால் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்தனர்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று முன்தினம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. பெய்ரூட் நகரமே இந்த விபத்தினால் உருகுலைந்தது. அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. துறைமுகப்பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த வெடிக்கக்கூடிய அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த கோரவிபத்து ஏற்பட்டது.

இந்த வெடிவிபத்தில் பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி, துறைமுகப்பகுதியே நிலைகுலைந்து போனது. இந்த கோரவிபத்தில் இதுவரை 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது இந்த வெடி விபத்தில் மாயமானவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 lakh people,homes,accident,beirut ,3 லட்சம் பேர், வீடுகள், விபத்து, பெய்ரூட்

இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக லெபனானில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. தற்போது இந்த வெடிவிபத்து காரணமாக 3 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளதாக பெய்ரூட் கவர்னர் மர்வான் அஃபோண்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கவர்னர் மர்வான் அஃபோண்ட் கூறுகையில், பெய்ரூட் வெடிவிபத்து காரணமாக 5 பில்லியன் டாலர்கள் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 3 லட்சம் மக்கள் தற்காலிகமாக வீடுகளை இழந்துள்ளனர். கிட்டத்தட்ட பெய்ரூட்டின் பாதி நகரம் இந்த வெடிவிபத்தால் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது அழிந்துள்ளனது. இது ஒரு பேரழிவு நிலைமை. வரலாற்றில் இதுபோன்ற நிகழ்வை பெய்ரூட் நகரம் சந்தித்ததே கிடையாது என்று கூறியுள்ளார்.


Tags :
|