Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பம்

By: Monisha Sat, 01 Aug 2020 1:15:36 PM

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பம்

தமிழகத்தில் கடந்த மாதம் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது. முடிவுகள் வெளியானதை தொடர்ந்து கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க உத்தரவு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து என்ஜினீயரிங் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைனில் விண்ணப்பப்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆன்லைன் விண்ணப்பதிவு கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இதற்காக விண்ணப்பிப்பதற்கு நேற்று கடைசிநாளாகும்.

colleges,application,arts and science,online,certification ,கல்லூரிகள்,விண்ணப்பம்,கலை மற்றும் அறிவியல்,ஆன்லைன்,சான்றிதழ்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகளில் இருக்கும் 92 ஆயிரம் இடங்களுக்கு மொத்தம் 3 லட்சத்து 12 ஆயிரத்து 883 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர்.

இந்த படிப்புக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களுடைய சான்றிதழை இன்று(சனிக்கிழமை) முதல் பதிவேற்றம் செய்யலாம். பதிவேற்றம் செய்வதற்கான கடைசிநாள் வருகிற 10-ந்தேதி ஆகும்.

Tags :
|