Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 3,242 பேர் சிகிச்சை; 2,18,856 பேர் குணம்

சென்னையில் கொரோனாவுக்கு 3,242 பேர் சிகிச்சை; 2,18,856 பேர் குணம்

By: Monisha Fri, 11 Dec 2020 2:35:17 PM

சென்னையில் கொரோனாவுக்கு 3,242 பேர் சிகிச்சை; 2,18,856 பேர் குணம்

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 856 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 3,242 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,11,716 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி இதுவரை 3,898 பேர் பலியாகியுள்ளனர்.

corona,treatment,cure,death,detail ,கொரோனா,சிகிச்சை,குணம்,பலி,விவரம்

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம்- 356 பேர்
அண்ணா நகர்- 399 பேர்
தேனாம்பேட்டை- 282 பேர்
தண்டையார்பேட்டை- 151 பேர்
ராயபுரம்- 217 பேர்
அடையாறு- 327 பேர்
திரு.வி.க. நகர்- 325 பேர்
வளசரவாக்கம்- 205 பேர்
அம்பத்தூர்- 274 பேர்
திருவொற்றியூர்- 73 பேர்
மாதவரம்- 131 பேர்
ஆலந்தூர்- 180 பேர்
பெருங்குடி- 134 பேர்
சோழிங்கநல்லூர்- 74 பேர்
மணலி- 49 பேர்.

Tags :
|
|
|