Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு

மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு

By: Monisha Mon, 22 June 2020 6:00:35 PM

மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு

இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலத்தில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் உள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் நேற்று எந்தவித தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதே வருகிற 28-ந்தேதியும் எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

madurai,vellore,thiruvannamalai,ranipettai,full curfew ,மதுரை,வேலூர்,திருவண்ணாமலை,ராணிப்பேட்டையில்,முழு ஊரடங்கு

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாகி வரும் மதுரை, வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டையில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

நேற்று வரை மதுரையில் 705 பேரும், திருவண்ணாமலையில் 1,060 பேரும், வேலூரில் 477 பேரும், ராணிப்பேட்டையில் 470 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags :