Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் மேலும் 4 சிறப்பு ரெயில்கள்!

தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் மேலும் 4 சிறப்பு ரெயில்கள்!

By: Monisha Fri, 04 Sept 2020 5:36:19 PM

தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் மேலும் 4 சிறப்பு ரெயில்கள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்தை வரும் 7-ந் தேதி முதல் இயக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் வரும் 7-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 4 சிறப்பு ரெயில்களுக்கான அறிவிப்பை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னையிலிருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதேபோல் திருச்சி - நாகர்கோவில் இடையேயும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

tamil nadu,special train,southern railway,chennai,trichy ,தமிழ்நாடு,சிறப்பு ரெயில்,தெற்கு ரெயில்வே,சென்னை,திருச்சி

சென்னை எழும்பூர்-செங்கோட்டை இடையே செப்டம்பர் 10ம் தேதி முதல், வாரம் மூன்று முறை சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. சென்னை-கன்னியாகுமரி இடையே 8ம் தேதி முதல் தினமும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை - மேட்டுப்பாளையம் இடையே 7ம் தேதி முதல் தினமும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இதேபோல் திருச்சி-நாகர்கோவில் இடையே 7ம் தேதி முதல் சிறப்பு ரெயில் தினமும் இயக்கப்படுகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களுடன் இந்த புதிய ரெயில்களுக்கும் சேர்த்து நாளை காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்குகிறது.

Tags :