Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 4,662 பேர் சிகிச்சை

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 4,662 பேர் சிகிச்சை

By: Monisha Sat, 21 Nov 2020 2:59:24 PM

சென்னையில் மண்டல வாரியாக கொரோனாவுக்கு 4,662 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னைதான் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஆனால் தற்போது சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 084 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 4,662 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2,02,660 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி 3,802 பேர் பலியாகியுள்ளனர்.

chennai,corona virus,infection,treatment,kills ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 309
அண்ணா நகர் - 411
தேனாம்பேட்டை - 295
தண்டையார்பேட்டை - 192
ராயபுரம் - 280
அடையாறு- 240
திரு.வி.க. நகர்- 306
வளசரவாக்கம்- 240
அம்பத்தூர்- 270
திருவொற்றியூர்- 131
மாதவரம்- 158
ஆலந்தூர்- 179
பெருங்குடி- 137
சோழிங்கநல்லூர்- 57
மணலி - 47

Tags :