Advertisement

கோவை மாவட்டத்தில் புதிதாக 568 பேர் கொரோனாவால் பாதிப்பு

By: Monisha Mon, 21 Sept 2020 10:04:58 AM

கோவை மாவட்டத்தில் புதிதாக 568 பேர் கொரோனாவால் பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.

சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த வாரம் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்திருந்தது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது.

coimbatore district,corona virus,infection,death,treatment ,கோவை மாவட்டம்,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

கோவை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 76, 67, 60, 60 வயது முதியவர்கள், 55 வயது ஆண், 40 வயது பெண் ஆகிய 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் கோவையில் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 382-ஆக உயர்ந்துள்ளது..

கோவையில் அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 488 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை கோவை மாவட்டத்தில் 21 ஆயிரத்து 168 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 4 ஆயிரத்து 364 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags :
|