Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விழுப்புரத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விழுப்புரத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 21 Oct 2020 6:04:04 PM

விழுப்புரத்தில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 13,170 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 104 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நோய் பாதிப்பில் இருந்து 12,524 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள 542 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 400-க்கும் மேற்பட்டவர்களின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளிவந்தது.

corona virus,infection,treatment,death,villupuram ,கொரோனா வைரஸ்,பாதிப்பு,சிகிச்சை,பலி,விழுப்புரம்

இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 செவிலியர்கள், உளுந்தூர்பேட்டை கோர்ட்டு ஊழியர், பிரம்மதேசம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 58 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,228 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் பாதிப்பிலிருந்து நேற்று ஒரே நாளில் 73 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

Tags :
|