Advertisement

மதுரையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

By: Monisha Wed, 21 Oct 2020 08:50:41 AM

மதுரையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மதுரையில் புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 94 ஆயிரத்து 030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் தற்போது 36 ஆயிரத்து 734 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6 லட்சத்து 46 ஆயிரத்து 555 ஆக அதிகரித்துள்ளது.ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 741 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட கொரோனா பதிப்பில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகளவில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

madurai,corona virus,treatment,death,infection ,மதுரை,கொரோனா வைரஸ்,சிகிச்சை,பலி,பாதிப்பு

மதுரையில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 100-க்கும் கீழாகவே உள்ளது. மதுரையில் நேற்று புதிதாக 61 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 47 பேர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 145 ஆக உயர்ந்தது.

மேலும் நேற்று 70 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 986 ஆக உயர்ந்துள்ளது. இவர்களை தவிர 750 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று கொரோனாவால் 80 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

Tags :
|