Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • மாலத்தீவில் சிக்கி தவித்த 700 பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

மாலத்தீவில் சிக்கி தவித்த 700 பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

By: Nagaraj Sun, 07 June 2020 8:12:00 PM

மாலத்தீவில் சிக்கி தவித்த 700 பேர் தாயகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்

மாலத்தீவில் சிக்கித்தவித்த தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 700 பேரை ஐ.என்.எஸ். ஜலஸ்வா என்ற போர் கப்பல் மூலமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தூத்துக்குடியில் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்காக வான் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளிலும் சிக்கியுள்ள இந்தியர்களை சமுத்திர சேது என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

indians,tuticorin,welcome,experiment,ins jalaswa ,
இந்தியர்கள், தூத்துக்குடி, வரவேற்பு, பரிசோதனை, ஐ.என்.எஸ் ஜலஸ்வா

இந்த திட்டத்தின்படி மாலத்தீவில் சிக்கித்தவித்த தமிழர்கள் உட்பட இந்தியர்கள் 700 பேரை ஐ.என்.எஸ். ஜலஸ்வா என்ற போர் கப்பல் மூலமாக தாயகம் அழைத்து வந்தனர். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் நிலக்கரி இறங்குதளத்தில் அனுமதிக்கப்பட்ட கடற்படை கப்பலிலிருந்து ஒவ்வொருவராக சமுக இடைவெளியுடன் தரையிறக்கப்பட்டனர்.

இந்த கப்பலில் தமிழ்நாட்டை சேர்ந்த 508 பேர் உள்பட 700 பயணிகள் வந்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடமைகளில் கிருமிநாசினி தெளிக்கப்படும்.

indians,tuticorin,welcome,experiment,ins jalaswa ,
இந்தியர்கள், தூத்துக்குடி, வரவேற்பு, பரிசோதனை, ஐ.என்.எஸ் ஜலஸ்வா

இதனை தொடர்ந்து அவர்கள் பஸ்கள் மூலம் குடியுரிமை பரிசோதனை முனையத்திற்கு அனுப்பிவைக்கபட்டு குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

ஐ.என்.எஸ் ஜலஸ்வா கடற்படை கப்பல் மூலம் கடந்த 2 ஆம் தேதி இலங்கையில் இருந்து 713 இந்தியர்கள் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். மேலும் வரும் 17 ஆம் தேதி ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் ஐ.என்.எஸ் ஜலஸ்வா மூலம் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :