Advertisement

கொரோனா நோயாளிகளை கண்டறிய 8668 பிசிஆர் பரிசோதனைகள்

By: Nagaraj Tue, 29 Dec 2020 8:23:34 PM

கொரோனா நோயாளிகளை கண்டறிய 8668 பிசிஆர் பரிசோதனைகள்

8668 பிசிஆர் சோதனைகள்... கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண இலங்கையில் நேற்று மட்டும் 8 ஆயிரத்து 668 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதியில் இருந்து இதுவரை நாட்டில் 12 இலட்சத்து 13 ஆயிரத்து 18 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றில் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதியே அதிக எண்ணிக்கையிலான அதாவது 17 ஆயிரத்து 425 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

vavuniya,pcr test,sri lanka,confirmation of infection ,
வவுனியா, பிசிஆர் பரிசோதனை, இலங்கை,  தொற்று உறுதி

வவுனியாவில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையில் 10 ஆயிரத்து 844 பேருக்கு, பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2,727 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில், 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேபோன்று செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 239 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.

வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 554 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

Tags :