Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தடையை மீறி வேல் யாத்தரை... மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேர் கைது!

தடையை மீறி வேல் யாத்தரை... மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேர் கைது!

By: Monisha Tue, 10 Nov 2020 4:20:18 PM

தடையை மீறி வேல் யாத்தரை... மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேர் கைது!

செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் பா.ஜ.க. சார்பில் வேல்யாத்திரை நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, வேல் யாத்திரை பொறுப்பாளரும் மாநில நிர்வாகியுமான நரேந்திரன், மாநில பா.ஜ.க. செயலாளர் கே.டி.ராகவன், மாவட்ட தலைவர் பலராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் பேசும்போது கூறியதாவது:- பொதுமக்களிடம் தமிழ் வேறு, ஆன்மிகம் வேறு என போலி மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர். இந்துக்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பா.ஜ.க. முன்னால் நிற்கும்.

bjp,vel yatra,murugan,arrest,demonstration ,பா.ஜ.க,வேல் யாத்தரை,முருகன்,கைது,ஆர்ப்பாட்டம்

கந்தசஷ்டி கவசத்தை தவறாக சித்தரித்து கருப்பர் கூட்டம் அவமானப்படுத்தியது. அதனை யாரும் தட்டி கேட்கவில்லை, ஆனால் பா.ஜ.க. அதனை தட்டி கேட்டது. மு.க.ஸ்டாலின் கருப்பர் கூட்டத்தை பின்னால் இருந்து இயக்குகிறார். தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தந்த தமிழக அரசு பா.ஜ.க.வுக்கு மறுக்கிறது. தேசிய அரசியலும், ஆன்மிக அரசியலும் தமிழகத்தில் காலூன்றுவதற்கான நேரம் நெருங்கி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

தடையை மீறி வேல் யாத்தரை தொடங்கிய பா.ஜ.க. மாநில தலைவர் முருகன் உள்பட 935 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Tags :
|
|