Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையில் கொரோனாவுக்கு 9,946 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

சென்னையில் கொரோனாவுக்கு 9,946 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

By: Monisha Sat, 19 Sept 2020 12:45:09 PM

சென்னையில் கொரோனாவுக்கு 9,946 பேர் சிகிச்சை; மண்டல வாரியாக தகவல்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று 67 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 8,685 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,525 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் 46,506 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,53,616 ஆக உள்ளது. ஆனால் தற்போது 9,946 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

chennai,corona virus,infection,death,treatment ,சென்னை,கொரோனா வைரஸ்,பாதிப்பு,பலி,சிகிச்சை

சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

கோடம்பாக்கம் - 1,226
அண்ணா நகர் - 1,012
தேனாம்பேட்டை - 787
தண்டையார்பேட்டை - 675
ராயபுரம் - 796
அடையாறு - 840
திரு.வி.க. நகர் - 828
வளசரவாக்கம் - 723
அம்பத்தூர் - 749
திருவொற்றியூர் - 278
மாதவரம் - 371
ஆலந்தூர் - 614
பெருங்குடி - 497
சோழிங்கநல்லூர் - 352
மணலி - 118

Tags :
|