Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முககவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.65¼ லட்சம் அபராதம் வசூல்

முககவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.65¼ லட்சம் அபராதம் வசூல்

By: Karunakaran Sat, 25 July 2020 9:26:35 PM

முககவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.65¼ லட்சம் அபராதம் வசூல்

கொரோனா பரவுதலை தடுக்க அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், முககவசம் அணிய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முககவசம் அணிவதை கண்காணிப்பதற்காக மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவின் பேரில பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கண்காணிப்பு கேமரா மூலம் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. சமூக இடைவெளி கடைபிடிக்காத கடைகள் சீல் வைக்கப்பட்டு வருகிறது. முககவசம் அணியாத தனி நபர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது.

corona mask,madurai,65 lakh,fine ,கொரோனா மாஸ்க், மதுரை, 65 லட்சம், அபராதம்

ரூ.100-ஆக இருந்த அபராத தொகை தற்போது ரூ.200-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது இதுவரை மதுரை மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.65 லட்சத்து 23 ஆயிரத்து 750 வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் போலீசார் இதுவரை ரூ.16 லட்சத்து 43 ஆயிரத்து 800 வசூல் செய்து உள்ளனர்.

புறநகர் போலீசார் ரூ.14 லட்சத்து 52 ஆயிரத்து 700-ம், மாநகராட்சியினர் ரூ.10 லட்சத்து 67 ஆயிரத்து 500-ம், கலெக்டரால் அமைக்கப்பட்ட பறக்கும் படையினர் ரூ.9 லட்சத்து 7 ஆயிரத்து 150-ம் அபராதம் வசூலித்து உள்ளனர். நகராட்சி துறையினர் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம், பேரூராட்சி துறையினர் ரூ.9 லட்சத்து 38 ஆயிரத்து 600, கிராம பஞ்சாயத்தில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 700 வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :