Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • செய்தியாளர் ஒருவரின் கிடுக்கிப்பிடி கேள்வி; தர்ம சங்கடத்தில் தவித்த அதிபர் டிரம்ப்

செய்தியாளர் ஒருவரின் கிடுக்கிப்பிடி கேள்வி; தர்ம சங்கடத்தில் தவித்த அதிபர் டிரம்ப்

By: Nagaraj Sat, 15 Aug 2020 2:39:29 PM

செய்தியாளர் ஒருவரின் கிடுக்கிப்பிடி கேள்வி; தர்ம சங்கடத்தில் தவித்த அதிபர் டிரம்ப்

செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாத நிலை அதிபர் டிரம்பிற்கு ஏற்பட்டுள்ளது.

'பொதுமக்களிடம் கூறிய பொய்களுக்கு என்றாவது வருந்தியது உண்டா?' என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியதால், அந்தக் கேள்வியைப் புறக்கணித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போதும், பொதுமக்கள் உரையின் போதும் ஏராளமான பொய்யான செய்திகளையும். தவறான தகவல்களையும் அளிப்பதாக அவர்மீது எப்போதுமே விமர்சனம் உண்டு. கடந்த சில வருடங்களில் மட்டும் டிரம்ப் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொய்யான தகவல்களை வெளியிட்டுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. ஒரு நாளில் அவர் 12 முறையாவது பொய்யான தகவல்களைக் கூறிவிடுகிறார்.

press,question,embarrassment,president trump,avoided ,செய்தியாளர், கேள்வி, தர்மசங்கடம், அதிபர் டிரம்ப், தவிர்த்தார்

கொரோனா பரவல் தீவிரமாகப் பரவத் தொடங்கிய கடந்த சில மாதங்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை தவறான தகவல்களைக் கூறியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சூழலில் தான், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஹஃபிங்டன் போஸ்ட் ( Huffington Post) செய்தியாளர் ஷிரிஷ் டேட் (Shirish Date) என்பவர் அதிபர் டிரம்பை நோக்கி, ”அதிபராகப் பதவி வகித்த மூன்றரை ஆண்டுகளில் அமெரிக்க மக்களிடம் கூறிய பொய்களுக்கு வருந்தியது உண்டா?” என்று கேள்வி எழுப்பினார்.

திடீரென்று, எதிர்பாராத நேரத்தில் தர்ம சங்கடமான கேள்வியை எதிர்கொண்ட டிரம்ப் அமைதியானார். பத்திரிக்கையாளரின் செய்திக்கு பதிலளிக்க மறுத்தார் டிரம்ப். பத்திரிக்கையாளர் மீண்டும் அந்தக் கேள்வியை எழுப்ப, அந்தக் கேள்வியைப் புறக்கணித்த டிரம்ப் அடுத்த கேள்விக்குத் தாவிவிட்டார்.

இந்தக் கேள்வி குறித்து ஷிரிஷ் டேட், “டிரம்பிடம் இந்தக் கேள்வியைக் கேட்க 5 ஆண்டுகள் காத்துக்கொண்டிருந்தேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Tags :
|