Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பனைமரத்தில் இருந்து விழுந்த மைனாகுஞ்சுகளை பத்திரமாக கூட்டில் வைத்த மனிதாபிமான இளைஞர்

பனைமரத்தில் இருந்து விழுந்த மைனாகுஞ்சுகளை பத்திரமாக கூட்டில் வைத்த மனிதாபிமான இளைஞர்

By: Nagaraj Mon, 27 July 2020 10:47:05 AM

பனைமரத்தில் இருந்து விழுந்த மைனாகுஞ்சுகளை பத்திரமாக கூட்டில் வைத்த மனிதாபிமான இளைஞர்

சிறிய உயிரினங்களுக்கும் மனிதர்கள்தான் பாதுகாப்பு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளும் வகையில் இளைஞர் ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் ஒசுவப்பட்டி எனும் கிராமத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் இருந்த பனைமரத்தில் ஒரு மைனா கூடு கட்டி குஞ்சு பொரித்தது. இந்நிலையில் வேகமாக வீசிய காற்றின் தாக்கத்தால் பனை மரத்தில் இருந்த கூட்டில் இருந்து மூன்று மைனாக் குஞ்சுகள் பல அடி தூரத்தில் இருந்து கீழே விழுந்தன.

humanity,youth anand,myna chicks,palm ,மனித நேயம், இளைஞர் ஆனந்த், மைனா குஞ்சுகள், பனைமரம்

அப்போது அந்த வயல்வெளிக்கு வந்த ஆனந்த் என்ற இளைஞர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். எங்கிருந்து இந்த குஞ்சுகள் இங்கே விழுந்து இருக்கின்றன என்று தேடி பார்த்தவருக்கு பனை மரத்தில் இருந்த கூடு தெரிந்துள்ளது.

இதையடுத்த அந்த மைனாக் குஞ்சுகளை தன்னுடைய சட்டைப்பையில் வைத்துக்கொண்டு பனை மரத்தின் மேலே ஏறிச் சென்று அதனுடைய கூட்டிலேயே மீண்டும் பாதுகாப்பாக வைத்துவிட்டு கீழே இறங்கி வந்தார்.

சிலிர்க்க வைக்கும் மனிதநேயம் கொண்ட இளைஞர் ஆனந்தின் செயலை புகைப்படம் எடுத்த சரவணன் ராமசாமி என்பவர் முகநூலில் அதைப் பதிவிட்டுள்ளார். பலரும் அதைப் பாராட்டி தங்களின் முகநூல் பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Tags :