Advertisement

கிறிஸ்துமஸ் பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்

By: Monisha Fri, 25 Dec 2020 07:46:55 AM

கிறிஸ்துமஸ் பண்டிகை: கோலாகல கொண்டாட்டம்

ஏசு கிறிஸ்து 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 25-ம் தேதி பெத்லகேம் என்னும் ஊரில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இந்த நாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த திருவிழா கிறிஸ்தவ சமூக மக்களுக்கு முக்கிய திருவிழாவாக திகழ்கிறது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

christmas,celebration,festival,churches,prayer ,கிறிஸ்துமஸ் பண்டிகை,கொண்டாட்டம்,திருவிழா,தேவாலயங்கள்,பிரார்த்தனை

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தமிழகத்தின் வரலாற்று சிறப்பு மிக்க பல தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளோடு நடந்தது.

தேவாலயங்கள் மின்விளக்கு மற்றும் அலங்கார விளக்குகள் ஒளிர்வது பார்ப்போரின் கண்களை கவரும் வண்ணம் உள்ளது. அனைத்து மக்களும் புத்தாடைகள் அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

Tags :