Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தகவல்

சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தகவல்

By: Nagaraj Wed, 02 Dec 2020 08:36:35 AM

சென்னையிலிருந்து குருவாயூருக்கு தினமும் சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தகவல்

தினமும் சிறப்பு ரயில்... டிசம்பர் 8-ம் தேதி முதல் சென்னையிலிருந்து கேரளாவில் உள்ள குருவாயூருக்கு தினமும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

நாகர்கோவில், கோயமுத்தூர், சென்னைக்கு மதுரை வழியாக ரயில்சேவைகளை வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி முதல் துவக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொடிய உயிர் கொல்லி நோய்யான நோவல் கொரோனா வைரஸ் பெருந்தொற்று, ஊரடங்கு உத்தரவால் கடந்த கடந்த 7 மாதங்களுக்கும் மேல் ரயில்கள் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், சில ரயில்கள் குறித்த அட்டவணையை ரயில்வே துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாகர்கோவில் டூ குருவாயூருக்கு ரயில் சேவை வரும் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் துவக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சில ரயில் சேவைகளையும் அறிவித்துள்ளது.

southern railway,chennai,guruvayur,special train,people ,தென்னக ரயில்வே, சென்னை, குருவாயூர், சிறப்பு ரயில், மக்கள்

அதன்படி, டிசம்பர் 10-ம் தேதி முதல் சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு மதுரை வழியாக அதிவேக சிறப்பு ரயில் ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் இயக்கப்பட உள்ளது.

அதே போல, மறுமார்க்கமாக, நாகர்கோவிலிருந்து வெள்ளியன்று புறப்படும் ரயில், மறுநாள் அதிகாலை சென்னை எழும்பூர் ரயில் நிலையம் செல்லும். நாகர்கோவிலிருந்து கோயம்புத்தூருக்கு அதிவேக சிறப்பு ரயில் வரும் டிசம்பர் 8 முதல் தினமும் இயக்கப்படும்.

வரும் டிசம்பர் 8-ம் தேதி முதல் சென்னையிலிருந்து மதுரை வழியாக கேரளாவில் உள்ள குருவாயூர் வரை நாள்தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. தினமும் காலை 8.25-க்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 6.40 மணிக்கு குருவாயூரை சென்றடையும்.

மறு மார்க்கத்தில். குருவாயூரிலிருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் இரவு 8.35 மணிக்கு சென்னை எழும்பூரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை பாதுகாப்பாக பயணம் செய்ய ரயில் பயணம் மிகவும் உகந்தது என்பதால், தென்னக ரயில்வே துறையின் இந்த முடிவு, பொது மக்களை மிகுந்த மகிழ்ச்சியை வைத்துள்ளது.

Tags :