Advertisement

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகிறது திருப்பூர்

By: Nagaraj Mon, 11 May 2020 7:58:05 PM

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகிறது திருப்பூர்

கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாகும் திருப்பூர்... திருப்பூரில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்ததையடுத்து கொரோனா இல்லாத மாவட்டமாகிறது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் திருப்பூரில் மொத்தம் 114 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்ததையடுத்து, அந்த மாவட்டம் கொரோனா தொற்று இல்லா மாவட்டமாகிறது.

corona,tirupur,no,healed ,
கொரோனா, திருப்பூர், இல்லை, குணமடைந்தனர்

இதுபற்றி திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

"கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட இடுவாயைச் சேர்ந்த இருவர் முற்றிலுமாக குணமடைந்துள்ளனர். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையிலிருந்து அவர்கள் இன்று வீடு திரும்புகிறார்கள். இதன்மூலம், திருப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 114 பேரும் குணமடைந்துவிட்டனர்.

corona,tirupur,no,healed ,
கொரோனா, திருப்பூர், இல்லை, குணமடைந்தனர்

தற்போதைய நிலையில் திருப்பூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர்கூட சிகிச்சையில் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே சிவகங்கை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்துள்ளனர். சிவகங்கையில் 12 பேர் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து, 12 பேரும் குணமடைந்தனர். ஈரோட்டில் மொத்தம் 70 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 69 பேர் குணமடைந்துவிட்டனர், ஒருவர் பலியானார்.

Tags :
|
|