Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய கட்டுப்பாடு...பஸ்களில் பயணம் செய்ய ஆதார்கார்டு கட்டாயம்

புதிய கட்டுப்பாடு...பஸ்களில் பயணம் செய்ய ஆதார்கார்டு கட்டாயம்

By: Monisha Wed, 03 June 2020 2:11:21 PM

புதிய கட்டுப்பாடு...பஸ்களில் பயணம் செய்ய ஆதார்கார்டு கட்டாயம்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி மாவட்டத்தில் ‘கொரோனா’ ஊரடங்கிற்கு பிறகு தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நெல்லையில் இருந்து நாகர்கோவில், பாபநாசம், தென்காசி செல்லும் பஸ்களில் கூட்டம் அதிகரித்தது. இதனால் இன்று இந்த பகுதிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன. நாகர்கோவிலுக்கு மட்டும் காலையில் 10 பஸ்கள் இயக்கப்பட்டன.

இந்தநிலையில் நெல்லையில் இருந்து இன்று நாகர்கோவில் சென்ற பஸ்களில் ஆதார்கார்டு உள்ள பயணிகளை மட்டுமே ஏற்றினார்கள். பயணிகளிடம், ‘கண்டிப்பாக ஆதார்கார்டு, அல்லது ஆதார்கார்டு ஜெராக்ஸ் காட்டவேண்டும் அப்பொழுதான் ஏற்றிச் செல்லப்படுவீர்கள்’ என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

நேற்று நெல்லை, தூத்துக்குடி, தென்காசியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட பஸ்களில் சென்ற பயணிகளை ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் நிறுத்தி பயணிகளின் பெயர், விபரங்களை சேகரித்தனர். தேவையில்லாமல் செல்பவர்களை அப்பகுதியில் உள்ள கல்லூரிக்கு அழைத்து சென்று கொரோனா பரிசோதனை நடத்தினர். இதனால் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருந்தனர்.

new control,bus,aadhaar card,tirunelveli,nagercoil ,புதிய கட்டுப்பாடு,பஸ்,ஆதார்கார்டு,திருநெல்வேலி,நாகர்கோவில்

இந்தநிலையில் தான் இன்று நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்லும் பஸ்களில் பயணிகளுக்கு ஆதார்கார்டு கட்டாய மாக்கப்பட்டுள்ளது. பஸ்நுழைவு வாசலில் கண்டக்டர் நின்று ஆதார் கார்டை சரிபார்த்து, என்ன காரணத்திற்காக செல்கிறீர்கள் என்று விசாரணை நடத்தி அதன் பிறகே அனுமதிக்கப்பட்டனர்.

நெல்லையில் இருந்து வேலைக்காக நாகர்கோவில் செல்பவர்களுக்கு ஆரல்வாய்மொழி சோதனை சாவடியில் எவ்வித பரிசோதனையும் செய்யப்படவில்லை. ஆனால் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு ‘கொரோனா’ பரிசோதனை நடத்தப்படுகிறது.

Tags :
|