Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 100 கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கும் நிலை; ஐ.நா. எச்சரிக்கை

2030-ம் ஆண்டுக்குள் சுமார் 100 கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கும் நிலை; ஐ.நா. எச்சரிக்கை

By: Nagaraj Mon, 07 Dec 2020 7:57:01 PM

2030-ம் ஆண்டுக்குள் சுமார் 100 கோடி மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கும் நிலை; ஐ.நா. எச்சரிக்கை

ஐ.நா. சபை எச்சரிக்கை... கொடிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வரும் 2030-ம் ஆண்டுக்குள் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் சிக்கி தவிக்கும் நிலைமை ஏற்படும் என ஐநா சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொடிய கொரோனா நோவல் வைரஸ் நோய் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் பரவிவிட்டது. இந்த நோயின் பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 2-வது இடத்தில் இந்தியா உள்ளது. இந்நிலையில், ஐநா சபை மேம்பாட்டு திட்டத்தின் ஆய்வு ஒன்றில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் கொரோனா நோய்த் தொற்றால் சுமார் 100 கோடி பேருக்கு மேல் வறுமையில் சிக்கி தவிப்பார்கள் என்று ஐ.நா. புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.

un,report,warning,poverty,.100 crore people ,ஐ.நா., அறிக்கை, எச்சரிக்கை, வறுமை, .100 கோடி மக்கள்

இது குறித்து ஐ.நா. சபை சார்பில் வெளியான அறிக்கையில், "கொரோனாவின் கடும் விளைவுகள் காரணமாக கூடுதலாக 20 கோடியே 70 லட்சம் பேர் வரை வறுமை நிலைக்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது. இதனால் 2030-ம் ஆண்டுக்குள் வறுமையில் வாழ்வோர் எண்ணிக்கை மொத்தம் 100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா காலத்தில் உலக பொருளாதார நெருக்கடியில் 80 சதவீதம் உற்பத்தித்திறன் இழப்பு ஏற்படும் என்றும் இந்த நிலை வரும் 10 ஆண்டுகள் வரை தொடரும் என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆனால், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள ஆளும் தலைவர்கள் எடுக்கும் சரியான முடிவுகளால் மட்டுமே நிலையான வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். அவ்வாறு செய்தால், 14 கோடியே 60 லட்சம் பேர் வறுமையில் இருந்து மீள வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்படுள்ளது.

Tags :
|
|