Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை

By: Nagaraj Sun, 09 Aug 2020 4:09:46 PM

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை

ஆசனங்கள் ஒதுக்கும் நடவடிக்கை... புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார்.

சுகாதார பாதுகாப்பு முறைமைக்கு அமைய சமூக இடைவெளியை பேணி இவ்வாறு ஆசனங்களை ஒதுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

parliament,seats,majority,action ,நாடாளுமன்றம், ஆசனங்கள், பெரும்பான்மை, நடவடிக்கை

இதேவேளை, இம்முறை நாடாளுமன்றத்தில் ஆசனங்களை ஒதுக்கும்போது எதிர்க்கட்சியின் பின்வரிசையில் உள்ள சுமார் 20 ஆசனங்களை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்க வேண்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுள்ளதால் ஆளும் கட்சிக்கான ஆசனங்கள் போதாமையே இதற்கு காரணம் என நாடாளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவல மேலும் தெரிவித்துள்ளார்.

Tags :
|