Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

By: Monisha Sat, 12 Dec 2020 12:27:53 PM

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு மு.க. ஸ்டாலின் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்தின் 70-வது பிறந்தநாளை ரசிகர்கள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சியை அறிவிக்க உள்ள நிலையில் அவரது பிறந்தநாள் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளித்து உள்ளது.

இந்த நிலையில் இன்று பிறந்த நாள் காணும் நடிகர் ரஜினிகாந்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

rajinikanth,birthday,twitter,stalin,greetings ,ரஜினிகாந்த்,பிறந்தநாள்,ட்விட்டர்,ஸ்டாலின்,வாழ்த்து

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- அன்பும் பாசமும் கொண்ட இனிய நண்பர் ரஜினிகாந்த் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! பிறந்தநாள் கொண்டாடும் தாங்கள் நலமுடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன்!

நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களைத் தொலைபேசியில் அழைத்து எனது வாழ்த்தினைத் தெரிவித்தேன் என பதிவிட்டுள்ளார்.

Tags :
|