Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவிப்பு

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவிப்பு

By: Monisha Mon, 12 Oct 2020 10:56:34 AM

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நடிகை குஷ்பு அறிவிப்பு

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான இருந்த நடிகை குஷ்பு, காங்கிரசில் இருந்து விலகுவதாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகி உள்ளேன். பணத்துக்காகவோ, பெயர் அல்லது புகழுக்காகவோ காங்கிரஸ் கட்சியில் இணையவில்லை. நீண்ட யோசனைக்கு பிறகே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன். கட்சியில் இருந்து விலகினாலும் உங்கள் மீதான மதிப்பு எப்போதும் அப்படியே இருக்கும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் அவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து குஷ்பு நீக்கப்பட்டார். பாஜகவில் இணைய டெல்லி சென்ற நிலையில் குஷ்பு மீது காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags :