Advertisement

விபத்துகுள்ளாகிய நடிகை குஷ்பு சென்ற கார்!

By: Monisha Wed, 18 Nov 2020 10:47:38 AM

விபத்துகுள்ளாகிய நடிகை குஷ்பு சென்ற கார்!

மதுராந்தகம் அருகே நடிகை குஷ்பு சென்ற கார், கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு தன்னுடைய காரில் வேல் யாத்திரைக்காக கடலூர் நோக்கி மதுராந்தகம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது குஷ்பு சென்ற கார் திடீரென மோதியது.

இதில் காரின் பின்பக்க கதவு மட்டும் சேதம் அடைந்துள்ளதாகவும், குஷ்புக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

accident,actress khushboo,car,container lorry,vel yatra ,விபத்து,நடிகை குஷ்பு,கார்,கண்டெய்னர் லாரி,வேல் யாத்திரை

இந்நிலையில் விபத்து குறித்து நடிகை குஷ்பு கூறியதாவது:- கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில் கார் மட்டுமே சேதம் அடைந்தது. யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்றார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
|