Advertisement

கனடா பிரதமருக்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு

By: Monisha Wed, 02 Dec 2020 1:10:41 PM

கனடா பிரதமருக்கு கண்டனம் தெரிவித்த நடிகை குஷ்பு

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒன்று சேர்ந்து தலைநகரான டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் இப்போது மிகப் பெரிய போராட்டமாக உருவெடுத்து உள்ளது. விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய முதல் சுற்று பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து உள்ளது.

இந்த போராட்டம் குறித்து கனடா பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ கூறுகையில், "விவசாயிகள் எதிர்ப்பு குறித்து இந்தியாவில் இருந்து செய்திகள் வருகின்றன. உரிமைகளைப் பாதுகாக்க நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா எப்போதும் ஆதரவளிக்கும்" என்று கூறியிருந்தார்.

prime minister of canada,actress khushboo,farmers,struggle,agricultural law ,கனடா பிரதமர்,நடிகை குஷ்பு,விவசாயிகள்,போராட்டம்,வேளாண் சட்டம்

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில், "இந்திய விவசாயிகள் குறித்து கனடா தலைவர்கள் தவறான தகவலை தெரிவித்துள்ளனர். ஜனநாயக நாட்டின் உள்விவகாரத்தில் வேறொரு நாட்டின் தலைவர் கருத்து தெரிவிப்பது தேவையற்றது" என்று கூறி உள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்த நடிகை குஷ்பு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கூறியுள்ளார். "ட்ரூடோவாக இருந்தாலும், சரி யாராக இருந்தாலும் எங்கள் உள் நாட்டு பிரச்சினையில், தலையிட தேவையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags :