Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கிசான் திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பது தற்காலிகமாக நிறுத்தம்

கிசான் திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பது தற்காலிகமாக நிறுத்தம்

By: Nagaraj Sat, 12 Sept 2020 8:58:00 PM

கிசான் திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பது தற்காலிகமாக நிறுத்தம்

தற்காலிக நிறுத்தம்... கிசான் திட்டத்தில் பயனாளிகள் சேர்ப்பதை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் கிசான் திட்டத்தில் சுமார் 5.5லட்சம் பேரை இத்திட்டத்தில் போலியாக சேர்த்து நிதி உதவி பெற்றதோடு,ரூ.110 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அம்பலமானதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

suspension,prime minister,government of tamil nadu,relief ,தற்காலிக நிறுத்தம், பிரதமர், தமிழக அரசு, நிவாரணம்

மறு உத்தரவு வரும் வரை கிசான் திட்டத்தை நிறுத்தி வைக்குமாறு அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மழை மற்றும் வறட்சி காரணமாக நிவாரணம் வழங்கும் வகையிலும் மத்திய அரசு சார்பில் பிரதம மந்திரியின் கிசான் திட்டம் மூலம் ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags :