Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்கானிஸ்தான் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்கானிஸ்தான் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை

By: Monisha Fri, 23 Oct 2020 12:14:20 PM

கோயம்பேடு மார்க்கெட்டில் ஆப்கானிஸ்தான் வெங்காயம் 60 ரூபாய்க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரும் வெங்காயத்தில் 30 சதவீதம் மராட்டிய மாநிலம் நாசிக்கில் இருந்தும், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து 25 சதவீதமும், ஆந்திராவில் இருந்து 25 சதவீதமும் சப்ளை செய்யப்படுகிறது. எஞ்சிய 20 சதவீதம் வெங்காயம் தமிழகத்தின் உள்மாநில உற்பத்தியில் கிடைக்கிறது.

தற்போது, மழை காரணமாக வெங்காயம் வரத்து குறைந்து உள்ளதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதன்படி எகிப்து நாட்டு வெங்காயம் நேற்று முன்தினம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரவைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று ஆப்கானிஸ்தான் வெங்காயமும் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வரவைக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்படும் இந்த வெங்காயம் தற்போது வரை சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், மும்பையில் இறக்குமதி செய்து தான் தமிழகத்துக்கு கொண்டு வரப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

koyambedu market,afghanistan onion,sale,import ,கோயம்பேடு மார்க்கெட்,ஆப்கானிஸ்தான் வெங்காயம்,விற்பனை,இறக்குமதி

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு இதுவரை 120 டன் வெளிநாட்டு வெங்காயங்கள் வந்துள்ளது. எகிப்து மற்றும் ஆப்கானிஸ்தான் வெங்காயங்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாட்டு வெங்காய வரத்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் மொத்த விலையானது கிலோவுக்கு ரூ.100-ஐ தொடாமல் இருக்கும் என்று வியாபாரிகள் நம்புகின்றனர்.

இன்னும், 20 நாட்களில் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வெளிநாட்டு வெங்காயம் வரும் என்றும், அப்போது வெங்காய விலை மேலும் குறையும் என்றும், வியாபாரிகள் தெரிவித்தனர். டிசம்பர் 15-ந்தேதி வரை வெங்காயம் விலை உயர்வாக இருக்கும் என்றும், அதுவரை பொறுத்துத்தான் ஆக வேண்டும் என்றும் வெங்காய வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|