Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விவசாய அமைப்புகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

விவசாய அமைப்புகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

By: Monisha Mon, 07 Dec 2020 2:32:00 PM

விவசாய அமைப்புகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவசாயிகளுக்கு எதிராக இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள். ஆனால் புதிய வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. போராட்டம் நடத்தி வரும் பஞ்சாப் விவசாயிகளுடன் மத்திய அரசு இதுவரை ஐந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை. இதையடுத்து நாளை மறுநாள் மீண்டும் இரு தரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் களத்தில் குதித்துள்ளன. மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை என்று தெரிவித்துள்ள விவசாய அமைப்புகள் நாளை நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, சிவசேனா, ஆம்ஆத்மி, தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட 18 கட்சிகள் அறிவித்துள்ளன. நாளை நடைபெற உள்ள விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நாடு தழுவிய போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. வட மாநிலங்களில் இந்த முழு அடைப்பு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் இந்த போராட்டத்தை வெற்றி பெற செய்ய எதிர்க்கட்சிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றன. ஆனால் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தமிழக அரசு அனைத்துவித முன்எச்சரிக்கை ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

peasant,struggle,support,transport,ban ,விவசாயி,போராட்டம்,ஆதரவு,போக்குவரத்து,தடை

தமிழகத்தில் எட்டு போக்குவரத்து கழகங்கள் சார்பாக 22 ஆயிரம் அரசு பேருந்துகள் வழக்கமாக இயக்கப்படுகிறது. பொது வேலைநிறுத்தத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் அனைத்து அரசு பேருந்துகளும் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழக உயர் அதிகாரி தெரிவித்தார். முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றாலும் ரயில் போக்குவரத்து தடைபடாது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வழக்கம் போல் நாளை இயக்கப்படுகிறது.

நாளை நடைபெறும் வேலைநிறுத்தத்திற்கு தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., மத்திய தொழிற்சங்கம், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் ஆதரவு அளித்திருப்பதால் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள முழு அடைப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதையடுத்து நாளை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பேருந்து மற்றும் ரயில்களை வழக்கம் போல இயக்க மத்திய-மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளன. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

peasant,struggle,support,transport,ban ,விவசாயி,போராட்டம்,ஆதரவு,போக்குவரத்து,தடை

இதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். 1 லட்சம் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை பந்த் போராட்டத்தை காரணம் காட்டி பேருந்துகளை மறிப்பது, கல் வீசி தாக்குவது போன்ற சம்பவங்களில் யாரும் ஈடுபடக்கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர். அதுபோன்ற சம்பவங்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே யாரும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக்கூடாது எனவும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சென்னை, எருக்கஞ்சேரியில் நடந்தது. இந்த கூட்டத்தில் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது எனவும், சென்னையில் காவல்துறை அனுமதி பெற்று அறவழி போராட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

Tags :