Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா காலத்திலும் நம்பிக்கை தந்து வளர்ச்சி கண்ட விவசாயத்துறை

கொரோனா காலத்திலும் நம்பிக்கை தந்து வளர்ச்சி கண்ட விவசாயத்துறை

By: Nagaraj Tue, 01 Sept 2020 6:15:14 PM

கொரோனா காலத்திலும் நம்பிக்கை தந்து வளர்ச்சி கண்ட விவசாயத்துறை

விவசாயத்துறை வளர்ச்சி... கடந்த சில ஆண்டுகளாகவே குறைந்துவந்த இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியானது (GDP) கொரோனா பிரச்னையால் வீழ்ச்சியைச் சந்தித்து மைனஸ் 23.9 % ஆகப் பதிவாகியுள்ளது. இதில் நம்பிக்கை தரும் விதமாக இந்தியாவில் விவசாயத் துறை மட்டும் 3.4 % வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்.எஸ்.ஓ), புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் 2020 - 2021 ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.

இந்த ஆண்டின் ஜனவரி - மார்ச் காலாண்டில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 3.1 சதவிகிதமாக இருந்த நிலையில் ஏப்ரல் - ஜூன் மாத காலகட்டத்தில் - 23.9 % ஆக வீழ்ச்சியடைந்தது. நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக வணிகம், ஹோட்டல், கட்டுமானம் ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாகத் தொழில் துறை -38.1 %, உற்பத்தித் துறை -39.3 %, கட்டுமானத் துறை -50.3 %, நிலக்கரித்துறை -23.3 % என்று வீழ்ச்சி கண்டது.

economists,optimism,agriculture,growth,corona period ,
பொருளாதார நிபுணர்கள், நம்பிக்கை, விவசாயம், வளர்ச்சி, கொரோனா காலம்

ஆனால் மிகவும் நம்பிக்கை தரும் வகையில் விவசாயத்துறை மட்டுமே 3.4 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது. கடந்த ஆண்டு விவசாயத் துறையின் வளர்ச்சி 3 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் கடுமையான சரிவைக் கண்டுள்ளன.
இந்த பொருளாதார வீழ்ச்சியானது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமானது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
பசுபிக் பெருங்கடலில் ஏற்பட்ட லா - நினா விளைவால் வழக்கமாக ஜூன் - ஆகஸ்ட் காலகட்டத்தில் பெய்யும் தென்மேற்குப் பருவ மழை கடந்த ஆண்டு 9.8 % அதிகமாகப் பெய்தது. இந்த மழை அளவே விவசாயத்துறை உற்பத்தி அதிகரிக்கக் காரணமாக இருந்தது.
இதுவரை இல்லாதபடி இந்தியப் பொருளாதாரம் சரிந்து வீழ்ச்சியடைந்த போதிலும் விவசாயத்துறை மட்டும் வளர்ச்சி கண்டிருப்பது நம்பிக்கை தருவதாக இருப்பதாகப் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

Tags :
|