Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி அறிவிப்பு

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி அறிவிப்பு

By: Nagaraj Mon, 28 Sept 2020 8:37:24 PM

அதிமுக முதல்வர் வேட்பாளர் குறித்து வரும் 7ம் தேதி அறிவிப்பு

வரும் 7ம் தேதி அறிவிக்கப்படும்... அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஓ. பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் இணைந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இன்று நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நீட் தேர்வு ரத்து உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

october 7,chief ministerial candidate,announcement,aiadmk ,அக்டோபர் 7ம்தேதி, முதல்வர் வேட்பாளர், அறிவிப்பு, அதிமுக

செயற்குழு நிறைவு பெற்ற நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பது என்று செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி அதிமுக ஒருங்கணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி இருவரும் இணைந்து அக்டோபர் 7-ம் தேதி அறிவிப்பார்கள் என்று கூறினார்.

Tags :