Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த ஆண்டை விட தீபாவளி பண்டிகையையொட்டி காற்று, ஒலி மாசு குறைவாக பதிவு

கடந்த ஆண்டை விட தீபாவளி பண்டிகையையொட்டி காற்று, ஒலி மாசு குறைவாக பதிவு

By: Monisha Mon, 16 Nov 2020 10:31:49 AM

கடந்த ஆண்டை விட தீபாவளி பண்டிகையையொட்டி காற்று, ஒலி மாசு குறைவாக பதிவு

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டு கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் பட்டாசு வெடிப்பதில் வழக்கம்போல் இருந்த ஆர்வம் குறையவில்லை. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளால் காற்றின் மாசு அளவு அதிகரிக்கும். இதை கட்டுப்படுத்த காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்று, ஒலி மாசு அளவு கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் பெசன்ட் நகர், தியாகராயநகர், நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி, சவுகார்பேட்டை ஆகிய 5 இடங்களில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் கருவிகள் வைக்கப்பட்டு இருந்தன.

இந்த கருவியில் பதிவான காற்று, ஒலி மாசு குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

diwali,air pollution,noise pollution,chennai,fireworks ,தீபாவளி,காற்று மாசு, ஒலி மாசு,சென்னை,பட்டாசு

தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவும், தீபாவளி பண்டிகை அன்றும் பெசன்ட்நகர் உள்ளிட்ட 5 இடங்களில் காற்று மற்றும் ஒலி மாசு கண்காணிக்கப்பட்டன. இந்த ஆய்வில் அனைத்து இடங்களிலும் கந்தக டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியவவை நிர்ணயிக்கப்பட்ட அளவை காட்டிலும் மிகவும் குறைந்தே பதிவாகி இருப்பது கண்டறியப்பட்டது.

திருவல்லிக்கேணி மற்றும் சவுகார்பேட்டை பகுதிகளில் மட்டும் மிதக்கும் நுண்துகள்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட சற்றே கூடுதலாக இருந்தது. வளி மண்டல ஒலி மாசின் அளவு தீபாவளிக்கு முன்பு 69 டெசிபல் ஆக இருந்தது. தீபாவளியன்று ஒலி மாசின் அளவு அதிகரித்து 78 டெசிபல் ஆக பதிவானது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ஒலி மாசு 4 டெசிபல் முதல் 6 டெசிபல் வரை குறைந்துள்ளது.

இந்த தீபாவளிக்கு வளிமண்டல காற்று மற்றும் ஒலி மாசு குறைந்ததற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டுவாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளின் விழிப்புணர்வு தான் காரணம் ஆகும். இவ்வாறு அந்த கூறப்பட்டுள்ளது.

Tags :
|