Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் திறப்பு; அமைச்சர் தகவல்

ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் திறப்பு; அமைச்சர் தகவல்

By: Nagaraj Wed, 30 Dec 2020 2:00:44 PM

ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் திறப்பு; அமைச்சர் தகவல்

ஜனவரியில் திறப்பு... ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், தற்போது பைலட் திட்டத்திற்கு அமைவாக குறைந்த அளவிலான சுற்றுலாப் பயணிகளை அழைப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையங்கள் உத்தியோகபூர்வமாக திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை குறுகிய காலத்தில் மீள் கட்டியெழுப்பும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

tourism,ministry,permit,airport,opening ,சுற்றுலாத்துறை, அமைச்சு, அனுமதி, விமான நிலையம், திறப்பு

வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார வழிமுறைகளை முழுமையாக செயற்படுத்தி எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப்பகுதியில் விமான நிலையம் திறக்கப்படும். அத்துடன் வணிக விமான சேவைகளும் ஆரம்பிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சுற்றுலா பிரயாணிகளினால் வைரஸ் தொற்று ஒருபோதும் பரவலடையாது. சுற்றுலாத்துறை அமைச்சு அனுமதி வழங்கியுள்ள ஹோட்டல்களில் மாத்திரமே தங்க முடியும். சுற்றுலாப் பிரயாணிகளை கண்காணிப்பதற்காக விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரம், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு வரவழைக்கும் நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
|