Advertisement

மதுபான சாலைகள் அனைத்தும் 15 நாட்களுக்கு மூட உத்தரவு

By: Nagaraj Wed, 07 Oct 2020 3:42:51 PM

மதுபான சாலைகள் அனைத்தும் 15 நாட்களுக்கு மூட உத்தரவு

புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு... பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாட்டுகளின் படி, மதுபானசாலைகள் அனைத்தும் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படவுள்ளன.

உணவகங்கள், கஃபே விடுதிகள் ‘நிபந்தனைகளுடன்’ திறக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உணவங்கள் மற்றும் கஃபே விடுதிகளுக்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. முன்னதாக உணவக வாசலில் மாத்திரமே வைக்கப்பட்ட ‘மதுசாரத்தினால்’ தயாரிக்கப்பட்ட சனிடைசர் ஜெல் தற்போது உணவகத்தில் உள்ள ஒவ்வொரு மேஜையிலும் வைக்கப்பட வேண்டும்.

restrictions,bars,closing,restaurants ,கட்டுப்பாடுகள், மதுபானசாலைகள், மூடல், உணவகங்கள்

ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஒரு மீட்டர் இடைவெளியுடன் இருக்கைகள் வைக்கப்பட வேண்டும். ஒரு பெரிய மேஜை ஒன்றில் அதிகபட்சமாக ஆறு பேருக்கான இருக்கைகள் மாத்திரமே போடப்படவேண்டும். (முன்னதாக 10 பேர் வரை அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்) உணவு உண்ணும் நேரம் தவிர்த்து மீதமான நேரங்களில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர் அனைவரது பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் போன்ற தகவல்கள் உணவக நிர்வாகிகளினால் கட்டாயமாக சேகரிக்கப்பட வேண்டும். நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு உணவகங்களின் முன் பதிவு செய்யவேண்டும். தொலைபேசி ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு முன் பதிவு செய்ய கூடிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும்.

மிகச்சரியான சுகாதார நடவடிக்கைகள் பேணப்பட்டால் StopCovid செயலியை கட்டாயமாக தரவிறக்கி பயன்படுத்தவேண்டிய தேவை இல்லை. உணவக வாசலில் உணவகத்தின் மொத்த இருக்கைகள், வசதிகள், கழிவறைகள் போன்ற தரவுகளை வரைபடமூடாக காட்சிப்படுத்த வேண்டும்“ போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Tags :
|