Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைத்து நல்ல தலைவர்களும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் இணைந்துள்ளனர் - அமித்ஷா

அனைத்து நல்ல தலைவர்களும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் இணைந்துள்ளனர் - அமித்ஷா

By: Karunakaran Sat, 19 Dec 2020 7:23:50 PM

அனைத்து நல்ல தலைவர்களும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் இணைந்துள்ளனர் - அமித்ஷா

மேற்குவங்காளத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரசும், இந்த முறை மேற்குவங்காளத்தை கைப்பற்றிவிட வேண்டும் என பாஜகவும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் அக்கட்சியின் மூத்த தலைவர்களும் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரியும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா 2 நாள் சுற்றுப்பயணமாக இன்று மேற்குவங்காளத்திற்கு சென்று, தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.

good leaders,bjp,modi,amit shah ,நல்ல தலைவர்கள், பாஜக, மோடி, அமித் ஷா

பச்சிம் மிடினிப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் அமித்ஷா பேசியபோது, திரிணாமுல் காங்கிரசின் அனைத்து நல்ல தலைவர்களும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவில் இணைந்துள்ளனர். இது தொடக்கம் தான் தேர்தல் வரும் நேரத்தில் நீங்கள் (மம்தா) முழுமையாக தெரிந்து கொள்வீர்கள். 200-க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றி 2021-ம் ஆண்டு மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என்று கூறினார்.

மேலும் அவர், மேற்குவங்காளத்தில் தேர்தல் வரும் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டுமே இருப்பார். நீங்கள் 30 ஆண்டுகள் காங்கிரசுக்கும், 27 ஆண்டுகள் கம்யூனிஸ்ட்களுக்கும், 10 ஆண்டுகள் திரிணாமுல் காங்கிரசுக்கும் கொண்டுத்துள்ளீர்கள். 5 ஆண்டுகள் பாஜகவுக்கு தாருங்கள். நாங்கள் வங்காளத்தை சோனர் வங்காளமாக மாற்றிக்காண்பிக்கிறோம். மம்தா பானர்ஜி அவரது மருமகனை அடுத்த முதல்மந்திரியாக்க முயற்சி செய்து வருகிறார். நீங்கள் எவ்வளவு வன்முறைகளைச் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு பாஜகவும் அதிக வலிமைபெறும் என்று கூறினார்.

Tags :
|
|