Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்கினால் கடும் நடவடிக்கை - டெல்லி முதல்வர்

படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்கினால் கடும் நடவடிக்கை - டெல்லி முதல்வர்

By: Monisha Sat, 06 June 2020 5:16:39 PM

படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்கினால் கடும் நடவடிக்கை - டெல்லி முதல்வர்

டெல்லியில் நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று ஒரேநாளில் 1,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 334 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் பலியானோர் எண்ணிக்கை 708 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று காணொலி வாயிலாக மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

delhi,coronavirus,arvind kejriwal,hospital ,டெல்லி,கொரோனா வைரஸ்,அரவிந்த் கெஜ்ரிவால்,மருத்துவமனை

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய படுக்கை வசதிகள் உள்ளன. போதிய வென்டிலேட்டர்களும் உள்ளன. ஆனால், சில தனியார் மருத்துவமனைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன. அத்தகைய மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மற்ற கட்சியினரின் செல்வாக்கை பயன்படுத்தி மருத்துவமனையில் உள்ள படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்கலாம் என நினைப்பவர்களை விட மாட்டோம். சில மருத்துவமனைகள் பிளாக்கில் படுக்கைகளை ஒதுக்குவதால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்படுவதாக தகவல் வருகிறது. படுக்கைகளை பிளாக்கில் ஒதுக்குவதை தடுப்பதற்காக செல்போன் செயலியை அறிமுகம் செய்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags :
|