Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல்

அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல்

By: Nagaraj Tue, 13 Oct 2020 9:41:08 PM

அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தகவல்

'பிரைம் டே' அன்று அமேசான் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக திகழும் நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வியாபாரிகள், டீலர்கள் உள்ளனர். ஆன்லைன் வர்த்தகத்தில் முதன்மை நிறுவனமாக கொடிகட்டி பறக்கும் அமேசானில் அவ்வப்போது சில சர்ச்சைகளும் எழுவதுண்டு. தற்போது ஜெர்மனியில் உள்ள ஒரு தொழிலாளர் யூனியன் அமேசான் ஊழியர்களை வேலை நிறுத்தத்தில் ஈடுபட வலியுறுத்தியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள 7 அமேசான் குடோன்களில் பணிபுரியும் இந்த ஊழியர்களை ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இந்த தொழிலாளர் யூனியன் வலியுறுத்தியுள்ளது. இன்று அமேசான் பிரைம் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம், அமேசான் நிறுவனத்துக்கு சிக்கலை உண்டாக்கியுள்ளது.

ஆண்டுதோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் 'பிரைம் டே' தற்போது கொரோனா தாக்கம் காரணமாக கொண்டாட்டம் தள்ளிப் போடப்பட்டுள்ளது.

amazon,prime day,staff,strike,special offer ,அமேசான், பிரைம் டே, ஊழியர்கள், வேலை நிறுத்தம், சிறப்பு சலுகை

தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய போனசை அமேசான் நிறுவனம் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய இந்த ஜெர்மானிய தொழிலாளர் அமைப்பு அதனை வலியுறுத்தும் வகையில் ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தொழிலாளர்களை வலியுறுத்தியது.

அமேசான் நிறுவனம் தொழிலாளர் சட்டத்துக்கு எதிராக தொழிலாளர்களை அதிக நேரம் வேலை வாங்குவதாக முன்னதாக ஓர் குற்றச்சாட்டு இருந்து வந்தது. இது அப்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டது. தற்போது ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தம் அதிகமாக விவாதத்துக்குள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக அமேசான் நிர்வாகி கூறுகையில், தாங்கள் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் மற்றும் இதர வசதிகள் செய்து கொடுப்பதாகவும் தேவையில்லாமல் தொழிலாளர் யூனியன்கள் போராடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை பிரைம் டே அறிவிக்கப்படும். இந்த நாளில் அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக டிஸ்கவுண்ட் விலையில், இலவச ஷிப்பிங் உடன் பொருட்கள் விற்கப்படும். பிரைம் டே அன்று வழக்கத்தைவிட அமேசானில் வியாபாரம் அதிக அளவில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|
|