Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • 58 ஆண்டுகளாக உணவு அளித்த உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

58 ஆண்டுகளாக உணவு அளித்த உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

By: Karunakaran Fri, 09 Oct 2020 5:17:29 PM

58 ஆண்டுகளாக உணவு அளித்த உலக உணவு திட்ட அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

நோபல் பரிசை பெற வேண்டும் என்பது பல்துறை சாதனையாளர்களின் கனவாக இருக்கிறது. உலகளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பு, திங்கட்கிழமை சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் வெளியாக தொடங்கியது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஹெபாடைடிஸ்-சி வைரசை கண்டுபிடித்த விஞ்ஞானிகளான ஹார்வே ஜே. ஆல்டர், சார்லஸ் எம்.ரைஸ், மைக்கேல் ஹாக்டன் ஆகிய 3 பேர் மருத்துவத்துக்கான நோபல் பரிசை பெறுவதாக நோபல் பரிசு அகாடமி அறிவித்தது.

nobel peace prize,world food program,food,58 years ,அமைதிக்கான நோபல் பரிசு, உலக உணவு திட்டம், உணவு, 58 ஆண்டுகள்

இயற்பியலுக்கான நோபல் பரிசு கருந்துகளை உருவாக்கம், நட்சத்திர மண்டலத்தின் காணப்படும் அதிசய பொருள் கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்காக ரோஜர் பென்ரோஸ், ரெயின்ஹார்டு ஜென்சல், ஆண்ட்ரியா கெஸ் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. வேதியியலுக்கான நோபல் பரிசை இம்மானுவேல் சர்பென்டியர், ஜெனிபர் டவுட்னா ஆகிய 2 பெண் விஞ்ஞானிகள் கூட்டாக பெறுகிறார்கள்.

இலக்கியத்திற்கான நோபல் பரிசை, அமெரிக்க பெண் கவிஞர் லூயிக்லுக்கிற்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது உலக உணவு அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 58 ஆண்டுகளாக வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|